முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உடலையும் மனதையும் அழகாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்..!!

In this post we will see what to do to live a healthy life.
05:56 PM Jun 08, 2024 IST | Mari Thangam
Advertisement

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

உடற்பயிற்சி : தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால், உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது இல்லை. நீச்சல், சைக்கிளிங், ஜூம்பா, கார்டியோஸ், யோகா போன்றவற்றில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.

தூக்கம் : தினமும் 7-8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம். சரியாக தூங்கவில்லை என்றால், எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது. அன்றாட வாழ்வில் தெளிவான முடிவையும் எடுக்க முடியாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்.

சமூகத்துடன் இணைந்து இருங்கள் : எப்போதும் தனியாக இருக்காமல், குடும்பம், நண்பர்கள், பக்கத்து வீட்டினர் என அனைவருடன் நல்லுறவை பாராட்டுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவுங்கள். இப்படி செய்தால் மனதிற்கு ஒருவிதமான நிம்மதி கிடைக்கும்.

டயட் : கார்போஹைட்ரேட்ஸ், புரதம், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்து வகையான சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கவனம் : எந்தவொரு வேலை செய்தாலும், முழுமனதுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். வேறு எதையோ நினைத்துக் கொண்டு எதையோ செய்யக்கூடாது.

மருத்துவரின் உதவியை நாடுங்கள் : உங்களால் தாங்க முடியாத பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர் அல்லது மனநல நிபுணரின் உதவியை பெற்றுக்கொண்டு தீர்வு காணுங்கள்.

Read more ; குடும்ப தொகுதியான ரேபரேலியை டிக் செய்த ராகுல் காந்தி!!

Tags :
dietexercisefocusseek medical helpsleepsocialize
Advertisement
Next Article