முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரொம்ப ருசியான கேரள ஸ்டைல் களத்தப்பம்.! 20 நிமிஷத்துல சூப்பரான ஒரு ரெஸிபி.!

07:22 AM Dec 02, 2023 IST | 1newsnationuser4
Advertisement

வழக்கமான ஸ்நேக்ஸ் செஞ்சி போரடிக்குதா.? கேரளா ஸ்டைலில் எளிமையான மற்றும் சத்து மிக்க களத்தப்பும் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதன் செய்முறையும் எளிது மற்றும் சுவையும் மிக அருமையாக இருக்கும்.

Advertisement

இதை செய்வதற்கு முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்து அதனை நன்றாக கழுவி 2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு அரிசியை மிக்சிக்கு மாற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் சோறு மற்றும் இரண்டு ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். மாவு பதத்திற்கு வந்ததும் இதனை மிக்ஸியிலிருந்து எடுத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

இப்போது அரிசி எடுத்த அதே கப்பில் வெல்லம் எடுத்து அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் நன்றாக தண்ணீரில் கரையும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். வெல்லம் காய்ச்சிய பிறகு அதனை எடுத்து அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து கால் டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 பின்ச் உப்பு சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கலக்க வேண்டும். இதனை நன்றாக கலக்கிய பின்னர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் குக்கரை வைத்து அதில் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி என்னை நன்றாக சூடானதும் நறுக்கி வைத்த தேங்காயை போட்டு நன்றாக வறுக்கவும். தேங்காய் பொன்னிறத்தில் வந்ததும் கரைத்து வைத்த மாவை எடுத்து இதில் ஊற்றி தீயை சிம்மில் வைத்து விசில் போடாமல் குக்கரை மூடி 10 நிமிடம் வேக விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து நன்றாக வெந்து இருக்கிறதா என பதம் பார்க்க வேண்டும். இப்போது அப்பம் நன்றாக வெந்து இருந்தாலும் குக்கரை மூடாமல் அதே இதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான களத்தப்பம் ரெடி.

Tags :
CookingdietKalaththappamKerala stylereceipe
Advertisement
Next Article