இந்த அரிசியை அதிகளவு சாப்பிட்டால் ஆபத்தா..? ஆய்வுகள் கூறும் உண்மை..!! மக்களே ஜாக்கிரதை..!!
நாளொன்றுக்கு மனிதன் 3 வேலை உணவு அருந்துவான். இதில் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் பெரும்பாலான மக்கள் இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளையே சாப்பிடுகின்றனர். மதியம் மட்டும் வெள்ளை சாதத்தை சாப்பிடுவார்கள். ஆனால், சிலருக்கு 3 வேலையும் வெள்ளை சாதம் இருந்தால் தான் சாப்பிடுவார்கள்.
அப்படி அதிகமாக வெள்ளை சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு உடல்நலத்தில் எந்த தீங்கு விளைவிக்காமல் நன்மைகளை அளிக்கக்கூடியவை கருப்பு கவுனி அரிசி. நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசிக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் என சொல்லப்படுகிறது. இந்த அரிசியில் உள்ள அதிகளவு நார் சத்தானது எல்டிஎல் அதாவது லோ டென்சிட்டி லிப்போ புரோட்டின் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
இதனால் உண்டாகும் இதய பிரச்சனைகளின் அபாயம் குறைகிறது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு கவுனி அரிசி நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின்படி இது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் பினோலிக் என்ற கலவைகளில் ஆக்சிஜன் நிறைந்துள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது வளர் சிதை மாற்றங்களை அதிகரிக்க உதவுவதோடு உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். கருப்பு கவுனி அரிசியில் ஹீலியம், அரீசெனிக் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கின்றன. இந்த அரிசியை அதிக அளவு உட்கொண்டால் ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது.
Read More : ’அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொன்னால்தான் சினிமா வாய்ப்பு’..!! ’முதலில் நிர்வாணமாக பார்ப்பதே இவர்தான்’..!!