70 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்துவ காப்பீடு.. திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
மூத்த குடிமக்களுக்காக, மத்திய அரசு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது, அதன்படி 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களையும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM Ayushman Bharat Scheme)சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஆயுஷ்மான் அட்டையை எங்கு, எப்படி பெறலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் பெறலாம்
பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ், இந்தியாவில் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் இப்போது இத்திட்டத்தில் இருந்து பயனடைய முடியும். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்களின் குடும்பம் ஏற்கனவே பயன்பெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசாங்கத்தால் புதிய அட்டைகள் வழங்கப்படும். பின்னர் முதியவர்களுக்கு ரூ. 500000 வரை தனி காப்பீடு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. மேலும் அதில் வருமானம் தொடர்பாக எந்த அளவுகோலும் உருவாக்கப்படவில்லை. 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் ஆயுஷ்மான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது ? ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட அட்டையைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, சொந்த சான்றிதழ், புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேற்கூறிய ஆவணங்கள் இருந்தால், pmjay.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் உள்ள ஆபா பதிவு விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டை விவரங்களை உள்ளிட வேண்டும்.
ஆதாரை சரிபார்க்க, உங்கள் மொபைல் எண்ணில் OTP ஐப் பெற்று அதை உள்ளிடவும். இதற்குப் பிறகு, உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, உங்கள் ஆயுஷ்மான் கார்டைப் பதிவிறக்கம் செய்யலாம். அதன் பிரிண்ட் அவுட் எடுத்து எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம்.
PMJAY போர்ட்டல் அல்லது ஆயுஷ்மான் செயலியில் பதிவு செய்வதன் மூலம் தகுதியானவர்கள் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். ஏற்கனவே ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களும் புதிதாக விண்ணப்பம் செய்து, புதிய புதுப்பிக்கப்பட்ட கார்டுக்கு தங்கள் eKYC-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
Read more ; அப்பாவின் சொத்தில் மகளுக்கு இருக்கும் உரிமை என்ன? சொத்துரிமை பற்றி தெரிஞ்சுக்கோங்க..