மதிய உணவில் நீங்கள் செய்யும் தவறால் உடல் எடை கூடும் அபாயம்..!! இந்த நேரத்திற்கு சாப்பிட்டால் எடை குறையும்..!!
தற்போதைய தவறான வாழ்க்கை முறை பழக்கம், உணவு பழக்க வழக்கங்களால் உடல் பருமனால் இளம் வயது ஆண்களும், பெண்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், எதிர்பார்த்த வெற்றி அவர்களுக்கு கிடைப்பதில்லை.
உடல் எடையை குறைக்க சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை கனக்கச்சிதமாக குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மதிய உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆய்வின்படி, மதிய உணவு உடலில் இருக்கும் புரதத்தை பாதிக்கிறது. மதிய உணவில் எடை குறைக்க உதவும் புரதங்கள் உள்ளன. உணவு உண்ணும் நேரம் மாறுவதால் உடல் எடை கூடுகிறது என்று அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். மதிய உணவு நேரத்தை மாற்றிக்கொண்டே இருந்தால், உடல் பருமனால் பாதிக்கப்படலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் மதிய உணவு நேரத்தை சரி செய்ய வேண்டும்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மதியம் 3 மணிக்குப் பிறகு மதிய உணவு நேரம் மிகவும் மோசமானது. நீங்களும் 3 மணிக்குப் பிறகு மதிய உணவு சாப்பிட்டால், உங்கள் எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்க தொடங்கும்.
ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் மதியம் 3 மணிக்குப் பிறகு மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். ஆய்வில் 1,200 பேர் பங்கேற்ற நிலையில், அவர்கள் அனைவரும் அதிக எடை கொண்டவர்கள். ஆனால், இவர்களுக்கு மதியம் 3 மணிக்கு முன்னதாகவே மதிய உணவு உண்பதை வழக்கமாக்கியதும் அவர்களின் எடை வேகமாக குறைய ஆரம்பித்தது.
மதிய உணவிற்கு சரியான நேரம் எது..?
நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உணவை உண்ணும் போது, நீங்கள் சரியான நேரத்தில் உணவை சாப்பிட்டால், உங்கள் உயிரியல் கடிகாரம் சரியாக வேலை செய்யும். அதாவது, மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மதிய உணவு சாப்பிட்டு வந்தால், உடல் நலம் சீராக இருக்கும். மதிய உணவுடன், இரவு உணவையும் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். மாலையில் 5 மணி முதல் 7 மணிக்குள் உணவை சாப்பிட்டு விட வேண்டும். காலையில் 6 மணி முதல் 9 மணிக்குள் உணவை சாப்பிட்டு முடித்திட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Read More : இனி ஆதார் அட்டை பெற இவரின் ஒப்புதல் வேண்டும்..!! அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை..!!