மீதமான சாதத்தை பிரிட்ஜில் எத்தனை நாட்கள் வைக்கலாம்..? கெட்டுப்போகாமல் பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ் இதோ..
பல பெண்கள் ஃப்ரிட்ஜில் மீந்த சாதத்தை சேமித்து பயன்படுத்துவார்கள். ஆனால், அதை எத்தனை நாளைக்கு ஃப்ரிட்ஜில் வைக்கலாம்? அதிக நாள் வைத்து சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது போன்ற கேள்விக்கான பதில்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
சமைத்த சாதத்தை குளிர்சாதன பெட்டியில் எவ்வளவு காலம் வைக்கலாம்? பல சமயங்களில் அரிசியின் அளவு குறித்த சரியான மதிப்பீடு நம்மிடம் இருப்பதில்லை. அதனால்தான் தேவைக்கு அதிகமாக சாதம் மீதம் வருகிறது, அதை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் போது ஒரு வாரம் கடந்து செல்கிறது. இப்போது இந்த சாதத்தை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமைத்த அரிசியை நான்கு முதல் ஆறு நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். அதை ஒரு நாளைக்கு இரண்டு முறை சூடாக்க வேண்டும்.
சாதம் கெட்டுவிட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சாதம் சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவில்லை என்றால், அதை 24 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் வைத்திருந்தால், அது கெட்டுவிட்டது.
அரிசியை குளிர்சாதன பெட்டியில் சரியாக சேமிப்பதற்கான உதவிக்குறிப்புகள் :
* குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பதற்கு முன் சாதத்தை முழுமையாக குளிர்விக்க வேண்டும். சூடான சாதத்தை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பதால் ஈரப்பதம் அதிகரித்து, பாக்டீரியா வேகமாக வளரும்.
* எப்போதும் சாதத்தை காற்றுப்புகாத டப்பாவில் அல்லது ஜிப்லாக் பையில் வைத்திருங்கள், அதனால் ஈரப்பதமும் காற்றும் உள்ளே வராது.
* 1-2 மணி நேரத்திற்கு மேல் சாதத்தை வெளியில் வைக்க வேண்டாம். சீக்கிரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், நல்லது.
* சாதத்தை நீண்ட நேரம் சேமித்து வைக்க விரும்பினால், அதை ஃப்ரீசரில் வைக்கலாம். 1-2 மாதங்களுக்கு ஃப்ரீசரில் சாதம் நன்றாக இருக்கும்.
* முக்கியமாக, சாதத்தை பிரிட்ஜில் இருந்து எடுத்த உடனே சாப்பிடக்கூடாது. சிறிது நேரம் அறையின் வெப்பநிலையில் வைத்த பிறகுதான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* ஒருவேளை ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தில் இருந்து கெட்ட வாசனை வந்தால், அதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். ஏனெனில் பாக்டீரியாக்கள் அதில் பெருகி இருக்கும். மீறி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.