ஆண்களே..!! இந்த நோயில் இருந்து விடுபட உடனே இதை முயற்சி பண்ணுங்க..!! நீண்ட ஆயுளுடன் வாழலாம்..!!
சில ஆண்கள் உடற்பயிற்சி செய்யாமல் மது அருந்துதல், புகைப்பிடித்தல், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சில ஆண்களோ காலை உணவை தவிர்க்கின்றனர். ஆண்களிடம் காணப்படும் இந்த மோசமான பழக்கங்களால் இதய நோய், புற்றுநோய், காசநோய், உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற அபாயங்கள் ஏற்பட வழிவகுக்கின்றன. அந்த வகையில், ஆண்கள் நீண்ட ஆயுளோடு வாழ விரும்பினால் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம்.
* ஆண்களுக்கு அலுவலகம், வீடு, குடும்பம், குழந்தைகளின் கல்வி, நிதி நிலைமை போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தால் மாரடைப்பு, பக்கவாதம், எடை அதிகரிப்பு, நினைவாற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு வரக்கூடாது என்றால், உங்களுக்காக சில மணிநேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் எதை நினைத்தோ கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். மன அழுத்தத்தை குறைக்க தினமும் உடற்பயிற்சி பெரிதும் உதவும். பாடல் கேளுங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யுங்கள்.
* ஒரே இடத்தில் உட்காருவதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்களுக்கு அமிலத்தன்மை, உடல் பருமன், மூட்டுகள் மற்றும் கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, இரத்த ஓட்டமும் சரியாக நடக்காது. எனவே, அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் நின்று கொண்டு வேலை செய்யுங்கள் அல்லது 5 நிமிடம் நடக்கவும். மேலும், லிப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம்.
* பெரும்பாலான ஆண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, போதை பொருள் எடுத்துக்கொள்ளுவது போன்ற செயல்களில் அடிமையாகி உள்ளனர். இதனால் நுரையீரல் புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படும். எனவே, இந்த கெட்டப் பழக்கத்தில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ முடியும்.
* நீங்கள் உடல் எடையை குறைக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் விரும்பினால், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இது நல்ல மனநிலை மற்றும் உடலில் வெப்பநிலையை பராமரிக்கும். எனவே, நீங்கள் தினமும் குறைந்தது 2 அல்லது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
* சில ஆண்கள் வெளியில் பார்ப்பதற்கு ஃபிட்டாக இருந்தாலும், அவர்கள் உள் உடல் உறுப்புகள் அந்த அளவிற்கு நன்றாக வேலை செய்யாது. அந்த சந்தேகம் உங்களுக்கும் இருந்தால், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதய பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் இடைவெளியில் முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்வது மிக அவசியம். இதன் மூலம் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Read More : வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்..!! மக்களே உஷார்..!!