வெறும் ரூ.39,999 தான்..!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 112 கிமீ வரை பயணிக்கலாம்..!! ஓலா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஓலா நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. தற்போது இந்நிறுவனம், மிகக் குறைந்த விலையில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஓலாவின் CEO பவேஷ் அகர்வால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். Ola S1 இசட் மற்றும் ஜிக் ரேஞ்ச் மாடல்களின் விலை ரூ.39,000இல் இருந்து தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளர்.
இந்த இரண்டு மாடல்களுக்கான முன்பதிவுகளை நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், இவை ஏப்ரல் 2025 முதல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா தற்போது 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வழங்குகிறது. அதில், இரண்டு வரவிருக்கும் புதிய மாடல்களாக ஓலா கிக் (ரூ.39,999) மற்றும் கிக் பிளஸ் (ரூ.49,999) மற்றும் எஸ்1 இசட் (ரூ.59,999) மற்றும் எஸ் 1 இசட் பிளஸ் (ரூ.64,999) ஆகும்.
அதேபோல், ஏற்கனவே உள்ள தி எஸ்1 ஏர் (ரூ.1,00,499), தி எஸ்1 ப்ரோ (ரூ.1.34 லட்சம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாடல் கிக் தொழிலாளர்களுக்காக ஓலாவால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நீண்ட பயணங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். கிக் ஆரம்ப விலை ரூ.39,999 என்றும், கிக் பிளஸின் ஆரம்ப விலை ரூ.49,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிக் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 112 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ எனவும், அதே கிக் ப்ளஸ் மாடல் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இசட் மற்றும் இசட் பிளஸ் வகைகளிலும் கிடைக்கிறது. அதன் ஆரம்ப விலை ரூ.59,999 மற்றும் ரூ.64,999 ஆகும். இந்த மாடல்களில் போர்ட்டபிள் பேட்டரிகள் உள்ளன. அவை மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணிக்கின்றன.
Read More : சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?