ரேஷன் அரிசி கழுவும் போது, இந்த ஒரு பொருளை சேர்த்துக்கோங்க.. இனி வேற அரிசியே வாங்க மாட்டீங்க..
ரேசன் அரிசியை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மாவு அரைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. ரேஷன் அரிசியை சாப்பிடுவது கௌரவ குறைச்சலாக பார்க்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது ஒரு சிலர் ரேஷன் அரிசியில் இருக்கும் நன்மைகளை தெரிந்துக் கொண்டு பயன்படுத்த துவங்கிவிட்டனர். எல்லா காலத்திலுமே, ரேஷன் அரிசிக்கு மதிப்பு உள்ளது.
இதனால் தான் ரேஷன் அரிசி கடத்தல் இன்றுவரை தமிழகத்தில் நடந்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்டு, வேறு ரூபத்தில் சற்று விலை அதிகமாக சந்தைகளில் விற்கப்படுகிறது. பளபளப்பாக இருக்கும் அரிசியை தான் பொதுமக்களும் வாங்க விரும்புகிறார்கள். வெள்ளையாக இல்லாத அரிசி அனைத்தையுமே, பலர் தீண்டத்தகாத பொருளாகவே பார்கின்றனர். ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் தவறு.
பளபளப்பாக இருக்கும் அரிசியில் எந்த சத்தும் இருக்காது. அதே சமயம், ரேஷன் அரிசியில் பல வகையான சத்துக்கள் இருக்கும். ஆம், ரேஷன் அரிசியில் துத்தநாகம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளதால், பல நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை குறைக்க முடியும். இதில் குறைந்த கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இருப்பதால், உடல் பருமனை சுலபமாக குறைக்கலாம்.
ஆனால் ரேஷன் அரிசியில் அதிகமான அழுக்கு இருக்கும். இதனால், அரிசியை பயன்படுத்தும் போது சுமார் 4 அல்லது 5 முறை கழுவ வேண்டியிருக்கும். அப்போது தான் அதில் இருந்து அழுக்குகளை அகற்ற முடியும். ஆனால் இனி கவலையே வேண்டாம். ரேஷன் அரிசியுடன் ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கழுவி பாருங்கள். 2 முறை கழுவினாலே பளிச்சென்று மாறும், அதே சமயம் சத்தும் குறையாது. மேலும், இப்படி செய்வதால் அதிலுள்ள கெட்ட வாசனையும் நீங்கவிடும்.