For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10வது தேர்ச்சி போதும்.. இந்திய ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?

RRB has announced that applications are being accepted for 32,438 vacancies in Indian Railways.
02:03 PM Jan 24, 2025 IST | Mari Thangam
10வது தேர்ச்சி போதும்   இந்திய ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை     விண்ணப்பிக்க ரெடியா
Advertisement

இந்திய ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், வடக்கு ரயில்வேயில் 4,785 பணியிடங்கள், மேற்கு ரயில்வேயில் 4,672, மத்திய ரயில்வேயில் 3,244, தெற்கு ரயில்வேயில் 2,694 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisement

பணியிடங்கள் : குரூப் டி பிரிவில் Pointsman B (Traffic), Assistant (Track Machine) (Engineering), Assistant (Bridge) (Engineering), Assistant (Workshop) (Mechanical) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

தகுதி மற்றும் வயது வரம்பு : தற்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை ஊதியமாக ரூ. 18,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் மற்ற படி தொகைகள் எல்லாம் சேர்த்து சுமார் ரூ. 25,000 வரை ஊதியமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தேர்வு முறை : தேர்வுகள் இரண்டு நிலையில் நடக்கிறது. முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு, அதனை அடுத்து உடல் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார். தேர்வை தமிழிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கு ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.rrbapply.gov.in/ இணையதளத்தை பார்வையிடவும்..

Read more ; கர்நாடகாவில் புதிதாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு.. எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இதோ..!!

Tags :
Advertisement