For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதியம் சாப்பிட்டவுடன் செம தூக்கம் வருதா..? அப்படி தூங்குவது நல்லதா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Researchers say that half an hour nap in the afternoon is good for the body and drinking tea or coffee after waking up can double the energy in the body.
05:30 AM Oct 16, 2024 IST | Chella
மதியம் சாப்பிட்டவுடன் செம தூக்கம் வருதா    அப்படி தூங்குவது நல்லதா    மக்களே தெரிஞ்சிக்கோங்க
Advertisement

மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரைமணி நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு நல்லது என்று இங்கிலாந்தின் ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மதியம் சாப்பிட்டு முடித்ததும் நம்மில் பலருக்கு கிறக்கம் ஏற்பட்டு உறக்கம் வருவது வழக்கம். சிறிது நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும்.

Advertisement

ஆனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் அப்படி தூங்க முடியாது. அதனால் அருகில் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பது, செல்போனில் கேம் விளையாடுவது என்று தூங்காமல் கண்களுக்கு கடிவாளம் போடுவோம். ஆனால், இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மதிய நேரத்தில் தூங்கினால் நல்லது என்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

மதியம் அரைமணி நேரம் நன்றாக தூங்கினால், உடலுக்கு நன்மை என்றும் எழுந்த பின் டீ அல்லது காபி குடித்தால் உடலில் உற்சாகம் இரட்டிப்பாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. இருப்பினும், அரைமணி நேரத்திற்கு மேல் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்றும் மீறி நீண்ட நேரம் உறங்கினால் உடலின் அழகு, ஆரோக்கியம் பாதிப்படையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More : விவசாயிகளே..!! ஆடுகளை வைத்து இப்படியும் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..!!

Tags :
Advertisement