இளம் வயதிலேயே வழுக்கை இருக்கா?? காரணம் இது தான்..
ஒரு மனிதனுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். இதனால் தான் பலர் இந்த கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இன்று உள்ள காலகட்டத்தில், மிகவும் இளம் வயதிலேயே அதிக முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுகிறது. இதனாலேயே இளம் வயதினர் அநேகர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இப்படி இளம் வயதில் வழுக்கை வருவதை ஆங்கிலத்தில் premature androgenetic alopecia என்று கூறுகின்றனர். அதாவது 30-35 வயதுக்கு முன்கூட்டியே வழுக்கை வருகிறது எனில் அதற்கு ப்ரீமெச்சூர் பால்ட்னஸ் என்று பெயர். இதற்கு உளவியல் ரீதியான தாக்கங்கள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) என்பது ஆன்ட்ரோஜன் வகை ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் தான், உடல் ரீதியான வளர்ச்சிக்கு உதவும். அதாவது முடி வளர்ச்சி, முகம், மார்பகங்கள், அக்குள், அந்தரங்கப்பகுதி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுவது இந்த ஹார்மோன். இந்த ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள், இளம் வயதில் வழுக்கை வர காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி உதிர்வு இருக்கும்.
முன் பக்கம் இருக்கும் முடி மிகவும் மெல்லியதாக இருக்கும் என்பதால் அந்த முடி சீக்கிரம் உதிரும். சில நேரங்களில் மன அழுத்தம், காய்ச்சல், அறுவை சிகிச்சை போன்ற பல உடல் நல பாதிப்புகள் காரணமாகவும் முடி உதிரலாம். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் மன அழுத்தம் காரணமாக தான் முடி உதிர்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது போன்ற முடி உதிர்வுக்கு, எந்த காடுகளில் இருந்து வந்த எண்ணெயும் சரி செய்ய முடியாது. இதனால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
Read more: “உல்லாசமா இருந்தா போதும், குழந்தை வேண்டாம்”; பெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்..