முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரவில் தூக்கம் வரவில்லையா? கவலை வேண்டாம்!! இந்த Food எல்லாம் சாப்பிடுங்க!

05:41 AM May 28, 2024 IST | Baskar
Advertisement

இரவில் சரியாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியோடு எழுந்திருக்க முடியும். காலையில் அன்றாட பணிகளை தொடங்குவதற்கும் எளிதாக இருக்கும்.

Advertisement

தூக்கம் எல்லோருடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. நிம்மதியான தூக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். இரவில் நன்றாக தூங்க என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இரவில் நல்லா தூக்கம் வர உதவும் உணவுகள்:

1) இரவு தூங்கும் முன்பு சூடான பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும். இது ஒரு முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. பாலில் கால்சியம் தவிர, தூக்கமின்மையை போக்க ஒரு பாரம்பரிய தீர்வாகும்.

2)இரவில் நன்றாக தூங்க செர்ரிகள் உதவுகிறது. செர்ரிகளில் வைட்டமின் சி, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் நிறைந்துள்ளன

3)இரவு முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. முட்டையில் உள்ள புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நல்ல தூக்கத்திற்கு உதவுகின்றன.

4) பாதாமில் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக உள்ளது. .பாதாம், பிஸ்தா சாப்பிடுவது இரவில் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

5) சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்கள் மெலடோனின் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இந்த மீன்களில் வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளது. இவை நல்ல தூக்கத்திற்கு உதவும்.

Read More: மரங்களே இல்லாத நாடு பற்றி தெரியுமா? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கிடையாது..! என்ன காரணம் தெரியுமா..?

Tags :
இரவில் தூக்கம்இரவு உணவுகள்உணவுகள்தூக்கம்மத்திமீன்
Advertisement
Next Article