தொடர்ந்து 10 நாள் இந்த அரிசியை சாப்பிடுங்க, அதுக்கப்புறம் நீங்க சுகர் வியாதிக்கு மாத்திரையே சாப்பிட வேண்டாம்.. டாக்டர் அட்வைஸ்!!
சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு முறை தான். ஆனால் தற்போது பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோக்கியமான உணவுகள் என்ன என்பதை தேடி அதை பின் பற்ற முயற்சி செய்கின்றனர். அந்த வகையில், பலருக்கு எதிரியாக இருப்பது வெள்ளை சாதம் தான். ஆம், மூன்று வேலையும் சாதம் மட்டுமே சாப்பிடும் மனிதர்களும் உள்ளனர்.
ஆம், பெரும்பாலும் நமது தமிழர்களை பொறுத்தவரை சாதம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. என்ன தான் நாம் விதவிதமான டிபன் செய்து கொடுத்தாலும், ஒரு கைப்பிடி சாதம் ஆவது குடு என்று கேட்பவர்கள் அநேகர். அதனால் தான் சுகர் வியாதி குறைவதே இல்லை. இதனால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், வெறும் பத்தே நாளில் உங்கள் சர்க்கரை அளவை குறைத்து விடலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை. வெறும் 10 நாட்களில் சர்க்கரையைக் குறைக்க டாக்டர் பன்னீர் செல்வம் சிறந்த வழி ஒன்றை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, 'சுகர் குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எண்ணி ஒரு 10 நாள் ட்ரீட்மெண்ட் தான். 10 நாள் ட்ரீட்மெண்ட் என்பதை விட, 10 நாள் உங்கள் உணவுப் பழக்கவழக்கத்தை மாற்ற போகிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த 10 நாள் உணவுப் பழக்கவழக்கத்தில் என்ன மாற்ற வேண்டும் என்றால், வழக்கமாக நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி சாதத்தை நாம் நிறுத்த வேண்டும். அதற்கு பதில், ஒரு சிலர் மட்டுமே அறிந்த குதிரைவாலி அரிசியை சாப்பிட வேண்டும்.
குதிரைவாலி அரிசியை, நாம் காலை மற்றும் இரவில், இட்லியாகவும் தோசையாகவும் செய்து சாப்பிடலாம். மதிய உணவாகவும் இந்த அரிசியை சமைத்து சாப்பிடலாம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் 3 வேளையும் மாத்திரை சாப்பிடுவது உண்டு. ஆனால் இந்த குதிரைவாலி அரிசியை தொடர்ந்து 10 நாட்கள் மூன்று வேலையும் செய்து சாப்பிட்டால், நீங்கள் சுகர் மாத்திரை போட வேண்டிய அவசியமே இருக்காது.' என்று கூறியுள்ளார்.
Read more: நோய் இல்லாமல் வாழ, இது தான் ஒரே வழி; நிபுணர்கள் அளித்த விளக்கம்..