தினமும் காலையில் கற்பூரவல்லி இலை சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்துமா.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடலில் நோய்கள் வந்து விட்டாலே பலரும் உடனடியாக ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடுகின்றனர். ஆங்கில மருத்துவம் உடனடியாக நோய்களை குணமடைய வைத்தாலும் பல பக்க விளைவுகளை உடலில் ஏற்படுத்தும். ஆனால் நம் முன்னோர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பல நோய்களை குணப்படுத்தி வந்தனர்.
குறிப்பாக கற்பூரவல்லி இலையை வைத்து உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தலாம். இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கற்பூரவல்லி இலையை எப்படி பயன்படுத்தலாம் என்றும், இதில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்?
1. காலையில் பல் துலக்கிய பின்பு சில கற்பூரவல்லி இலைகளை வாயில் போட்டு மென்று சுடு தண்ணீர் குடித்து வந்தால் நெஞ்சு சளி, மூச்சடைப்பு, இருமல் போன்ற நோய்கள் குணமாகும்.
2. குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து கொடுத்து வந்தால் நாள்பட்ட சளி குணமாகும்.
3. உடலை பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
4. கற்பூரவல்லி இலையை ரசம் வைத்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடை குறையும்.
5. குறிப்பாக ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
6. பல் சொத்தை ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு கற்பூரவல்லி இலையை மென்று வந்தால் குணமாகும்.
7. காயங்கள் மற்றும் புண்களை ஆற்றும் வல்லமை இந்த கற்பூரவல்லி இலைக்கு அதிகமாக உள்ளது.
8. கற்பூரவல்லி இலையை அரைத்து மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள், மருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை இந்த கற்பூரவல்லி இலை கொண்டுள்ளது.