For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவு சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா..? நீங்களும் ஃபாலோ பண்ணுங்க..!!

05:30 AM May 19, 2024 IST | Chella
இரவு சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா    நீங்களும் ஃபாலோ பண்ணுங்க
Advertisement

உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள தொகைகள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க போதுமான உடற்பயிற்சிகள் செய்வது அவசியம். அதே போல நாம் எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதும் முக்கியம். காலையில் உடற்பயிற்சி செய்வது உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது. அதே போல இரவு உணவிற்குப் பிந்தைய நடை பயிற்சிகள் சமீபகாலங்களில் பெரும்பாலும் ஊக்குவிக்கப்படுகின்றன. அதற்கு என்ன காரணம்?  நன்மைகள் என்னென்ன? என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

மகிழ்ச்சி  ஹார்மோன்களை அதிகரிக்கும் :

உடற்பயிற்சி செய்வது அல்லது நடைப்பயிற்சியில் ஈடுபடுவது சாதாரணமாகவே உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. நாம் உடற்பயிற்சி செய்யும் போது, ​​அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஹார்மோன்களை வெளியிடுகிறது. நமது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. அதனால் நாம் முழுக்க சந்தித்த பிரச்சனைகள் கவலைகள் குறைந்து நிம்மதியான உணர்வு ஏற்படும்.

செரிமானத்தை மேம்படுத்தும் : 

சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்வது செரிமானத்தை பாதிக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பையும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் உண்டாக்கக் கூடும். இரவு உணவிற்குப் பிந்தைய நடைப்பயிற்சி உங்கள் இரவு உணவை நன்றாக ஜீரணிக்க உதவும். உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் அதிகரிக்கிறது

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் :

இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிட உதவுவதோடு, செரிமானத்தையும் துரிதப்படுத்தும். இந்த காரணிகள் ஒரு இரவு இடையூறு இல்லாத தூக்கத்தை ஏற்படுத்துகின்றன. உடலின் சீரான செயல்பாட்டிற்கு தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம். இரவு உணவிற்குப் பிறகு நடப்பது உங்கள் இரவு உணவின் ஆற்றலைப் பயன்படுத்த உதவுகிறது. இதனால் நீங்கள் விரைவாக தூங்கலாம்.

பசியைத் தவிர்க்க உதவுகிறது :

இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வது உங்களை சோர்வடையச் செய்து, தூங்குவதற்கு உங்களை தயார்படுத்தும். பெரும்பாலும், இரவு உணவிற்குப் பின் தாமதமாக விழித்திருப்பது பசியை உண்டாக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிக்கு வழிவகுக்கும். நடைப்பயிற்சி மேற்கொள்வது, நீங்கள் விரைவில் தூங்கச் செல்வதை உறுதிசெய்து, நள்ளிரவு பசி வாய்ப்புகளைக் குறைக்கிறது.

எடை இழப்புக்கு உதவும் :

சாப்பிட்டதும் தூங்கும்போது கொழுப்புகள் சேர்ந்து உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். சரியான உணவு முறையுடன் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கொழுப்பு சேராமல் இருப்பதோடு  ஆரோக்கியமான முறையில் எடை குறையும். கலோரிகள் குறைவதில் உதவி செய்யும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் : 

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்று சிறந்த இரத்த ஓட்டம் ஆகும். இரவு உணவிற்குப் பின் நடைப்பயிற்சி செய்வதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். மேலு,ம் கரோனரி நோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவும்.

Tags :
Advertisement