ZOHO -வில் வேலை வேண்டுமா? வந்தாச்சு புதிய அறிவிப்பு..!! சென்னையில் பணி.. மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் அக்கவுண்ட் மேனேஜர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கான கல்வி தகுதி என்று பிரத்யேகமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
என்னென்ன தகுதி?
- பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் 2 முதல் 7 ஆண்டு வரை பணிஅனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அக்கவுண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் வாடிக்கையாளரை எதிர்கொண்ட பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.
- நல்ல கம்யூனிகேசன் திறமை இருக்க வேண்டும்.
- அனலிட்டிக்கல் திறமை மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும்.
- சிஆர்எம் (CMR)ல் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை பதிவு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ;
பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். சம்பளம் குறித்த விபரம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சோஹோவின் (https://careers.zohocorp.com/forms/fcc89b5ebd373d598e0224d10f2199d13bbc4db00f765d3e8cc3bdbd9e9c65aa ) அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
Read more ; ’போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்க’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!