தென்காசி மக்களே.. ZOHO-வில் வேலை வேண்டுமா? ஆன்லைனில் உடனே விண்ணப்பிங்க.
முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் செயல்பட்டு வரும் ZOHO நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
என்னென்ன தகுதி? இந்த பணிக்கு 2023ம் ஆண்டு வரை கல்லூரி படிப்பை முடித்து சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் ஒன்று முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2024ல் படிப்பை முடித்தவர்கள் மற்றும் 2025ல் படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு Java, MySQL & JS தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெவலப், டெஸ்ட் மற்றும் புதிய சாப்ட்வேர் புரோகிராமை இம்பிளிமென்ட் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதேபோல் பிழையின்றி கோடிங் எழுத வேண்டி இருக்கும். மேம் ட்ரபிள்சூட், டீபக் உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டி இருக்கும். புதிய டெக்னாலஜி, பிரேம்வொர்க்ஸ் கற்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்வுக்கு 3 நாள் முன்பாக இ-மெயில் மூலம் அழைக்கப்படுவார்கள். அதில் தேர்வு தேதி பற்றிய அனைத்து அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக ZOHO-வில் பல்வேறு பணிகளுக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ஏற்கனவே ஜோஹோவில் பணியாற்றி மீண்டும் இண்டர்வியூவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more ; பொம்மைகள் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்..!! – நிபுணர்கள் எச்சரிக்கை