For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Yummy food : பேச்சுலர்களுக்கான கார சோறு.! டக்குனு 5 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!?

04:23 PM Feb 23, 2024 IST | 1newsnationuser5
yummy food   பேச்சுலர்களுக்கான கார சோறு   டக்குனு 5 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்
Advertisement

பொதுவாக பலருக்கும் தினமும் சமைக்க வேண்டும் என்றால் சலிப்பாக இருக்கும். சமைக்க வேண்டும் என்று சமையல் அறைக்குள் சென்றாலே இரண்டு மணி நேரம் ஆகாமல் வெளியே வர முடியாது. அந்த அளவிற்கு சமையல் வேலை அதிகமாக இருக்கும். மேலும் வேலைக்கு செல்பவர்கள் அதிக நேரம் செலவு செய்து சமையல் செய்ய முடியாது. இதற்கு பதிலாக ஹோட்டலில் வாங்கி சாப்பிடாமல் டக்குனு ஐந்தே நிமிடத்தில் சுவையான காரசோறு எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்? குறிப்பாக பேச்சுலர்ஸ்களுக்கு இந்த சமையல் முறை ஈஸியாக இருக்கும்.

Advertisement

தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் கருவேப்பிலை - 1 கொத்து, காய்ந்த மிளகாய் - 2, நிலக்கடலை - 1/2 கப், பூண்டு பொடியாக நறுக்கியது - 10 பல், மிளகாய் தூள் -1 டீஸ்பூன், சீரக தூள் - 1/2 டீஸ்பூன், பெருங்காய தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு , வடித்த சாதம் - 2 கப்

செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், நிலக்கடலை, கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். பின்பு இதில் மிளகாய் தூள், பெருங்காய தூள், உப்பு, சீரக தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்னர் அதில் வடித்து வைத்த சாதம் சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளை போட்டு மூடி வைத்து சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சுவையான கார சோறு தயார்.

English summary : Easy and tasty recipe for bachelor cooking

Read more : 70 வயதிலும் எழுந்து ஓட வைக்கும் அற்புத தேநீர்.! வேறு என்னென்ன நன்மைகளை தரும்.!?

Tags :
Advertisement