இனி கொசுக்களை விரட்ட, கெமிக்கல் நிறைந்த லிக்விட் வேண்டாம்.. பூண்டு இருந்தால் போதும்..
பொதுவாக மழைக்காலம் என்றாலே, முதலில் நினைவிற்கு வருவது கொசுக்கள் மற்றும் தொற்று நோய்கள் தான். ஆம், இந்த மழைகாலங்களில் பொதுவாகவே வீட்டில் கொசுக்கள் அதிகம் இருக்கும். இந்த கொசுக்கள் தொல்லையால் நம்மால் இரவில் சரியாக தூங்க கூட முடியாது. கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க நாம் கெமிக்கல் நிறைந்த லிக்விட் அல்லது பத்தியை பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல் ஆளையே காலி செய்து விடுகிறது. அப்படி எதுவும் பயன்படுத்தாவிட்டால், கொசுக்கள் மலேரியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தி ஆளை காலி செய்து விடுகிறது. இதற்க்கு என்ன தான் தீர்வு என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த கொசுக்களை விரட்ட இயற்கையான ஒரு பொருள் போதும்.
ஆம், இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பூண்டை வைத்து கொசுக்களை விரட்டலாம். பூண்டு பொதுவாக சமையலறையில் தான் பயன்படுத்தப்படும். ஆனால் கொசுக்களை விரட்ட பூண்டு ஒரு நல்ல தீர்வு. ஏனென்றால், பூண்டில் இருந்து வரும் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. இதனால் நாம் பூண்டை வைத்து கொசுக்களை சுலபமாக விரட்டலாம். இதற்கு முதலில், பூண்டை நன்றாக நசுக்கி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். கொதித்த தண்ணீரை நன்றாக ஆற வைத்து விட்டு, அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி விடுங்கள். இப்போது இந்த தண்ணீரை நீங்கள் மாலை அல்லது இரவு நேரத்தில் வீட்டில் தெளித்து விட்டால், கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் ஓடிவிடும்.