”பசங்க வளர்ந்துட்டாங்க”..!! ”இனிமே அது வேண்டாம்”..!! உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை நடுரோட்டில் குத்திக்கொன்ற காதலன்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி, அம்பேத்கர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமேஸ்வரன். இவரது மனைவி பாஞ்சாலி (39). நேற்றிரவு இவர் சிவகிரி மெயின்ரோட்டில் உள்ள கடைக்கு சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர், பாஞ்சாலியிடம் தகராறு செய்ததோடு அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாசுதேவ நல்லூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சமுத்திரவேல் (44) என்பவர், பாஞ்சாலியை கொலை செய்தது, தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசில் சமுத்திரவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், கணவரை விட்டு பிரிந்து வாழும் பாஞ்சாலிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது.
இதனால் அவரிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர், மகன்கள் பெரியவர்களாகி விட்டதால், மறுத்துவிட்டார். இதையடுத்து, அவர் கடைக்கு வந்தபோது நான் அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அவர் மீண்டும் மறுத்ததால், குத்திக் கொலை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சமுத்திரவேலை போலீசார், சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
Read More : ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு..!! காலை உணவு ரொம்ப முக்கியம்..!! அதுவும் இப்படி சாப்பிடுங்க..!!