"வயதான பெண்களுக்கு கூட இங்கு பாதுகாப்பு இல்லையா?" இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!!!
ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான பூங்கொடி. இவர் நேற்று முன்தினம், சென்னாங்காரணி என்னும் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மாலை நேரத்தில் சென்றுள்ளார். அப்போது அவர், இயற்கை உபாதை கழிக்க சென்னாங்கரணி ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த மர்ம நபர் ஒருவர், பூங்கொடியை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அந்த மர்ம நபர் பூங்கொடியை பலமாக தாக்கியுள்ளார்.
பூங்கொடியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், பலத்த காயமடைந்த பூங்கொடியை மீட்டு, ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூங்கொடியை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பூங்கொடியை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி, பூங்கொடியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
பூங்கொடி சென்ற பகுதியில், ஆறு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெறுவதால், வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அங்கு உள்ளனர். இதனால் வடமாநில இளைஞர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வயதான பெண்களுக்கு கூட இங்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், வாலிப பிள்ளைளை பள்ளிக்கும் கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.