முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிமுகவை சேர்ந்த திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபருக்கு உத்தரவு..!! ஐகோர்ட் அதிரடி..!!

11:19 AM Jan 13, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அதிமுக செய்தித் தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், பிரபல மாடலாகவும் உள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் அவதூறாக பேசி பத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் மீது அப்சரா ரெட்டி மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். அதில், தன்னை குறித்து வதந்திகளைப் பரப்பி வரும் ஜோ மைக்கேல் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தன்னைப் பற்றி வெளியிடப்பட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்சராவுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று அப்சரா ரெட்டி தெரிவித்திருந்தார். எனவே, அப்சரா ரெட்டிக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் ஏற்கனவே நீக்கியதால், நஷ்ட ஈடு வழங்குவதில் இருந்து தப்பியது.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்சரா, போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜோ மைக்கேல் பிரவீன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூபர் ஜோ மைக்கேல் நடத்தி வரும் மாடல் இதழியில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றுமாறு அப்சரவை அனுகியதாகவும் அதனை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஜோ மைக்கேல் அப்சராவை தாக்கி பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.

Tags :
அதிமுக செய்தி தொடர்பாளர்அப்சரா ரெட்டிசென்னை உயர்நீதிமன்றம்யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன்ரூ.50 லட்சம் இழப்பீடு
Advertisement
Next Article