”தடையில்லா மின்சாரம், முன்கூட்டியே மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்”..!! ஆட்சியர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..!!
இந்திய பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், அதை கணிப்பது சிரமமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெங்கால் புயல் சனிக்கிழமை இரவு சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தெற்கு ஆந்திராவிலும், வட தமிழக கரையோரங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், பொதுமக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் உத்தரவிட்டார்.
Read More : ஃபெங்கால் புயல் எப்போது எந்த இடத்தில் கரையை கடக்கிறது தெரியுமா..? பாதிப்பு எப்படி இருக்கும்..?