முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்க UPI ஐடி முடங்கிவிட்டதா?… காரணம் இதுதான்!… புதிய எச்சரிக்கை முறை!

09:54 AM Jan 02, 2024 IST | 1newsnationuser3
Advertisement

ஒரு பயனர் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 முதல் அவரது UPI ஐடி முடக்கப்படும். அதாவது ஜனவரி 1, 2024 முதல் அவரது பயன்படுத்தப்படாத ஐடி முடக்கப்பட்டுவிடும்.

Advertisement

இதுதொடர்பான NPCI அறிக்கையின்படி, வாடிக்கையாளர்கள் பழைய UPI ஐடியை செயலிழக்கச் செய்யாமல், அதாவது டீஆக்டிவேட் செய்யாமல் புதிய மொபைலில் புதிய UPI ஐடியுடன் மொபைல் எண்ணை இணைக்கின்றனர். இந்த விஷயத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது TRAI வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. NPCI இன் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து வங்கிகளும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் UPI ஐடியை செயலிழக்கச்செய்ய தொடங்கியுள்ளன. ஒருவர் ஒரு ஐடி -ஐ பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தால், அந்த பழைய UPI ஐடி மூலம் மோசடி நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதைத் தடுக்க NPCI மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், யுபிஐ மூலம் செய்யப்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும். இதன் கீழ் ஐயாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு புதிய எச்சரிக்கை முறைமையை அறிமுகப்படுத்தப்படும். இதில், ஒரு பயனரோ அல்லது வணிகரோ இந்த தொகையை விட அதிகமாக UPI மூலம் பணம் செலுத்தினால், அவருக்கு அழைப்பு அல்லது SMS மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டு இந்த பரிவர்த்தனையை சரிபார்க்கும்படி கேட்கப்படும். சரிபார்த்த பின்னரே கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.

Tags :
New alert systemUPI ID is disabled?UPI ஐடி முடங்கிவிட்டதா?காரணம் இதுதான்புதிய எச்சரிக்கை முறை
Advertisement
Next Article