For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்க பான் கார்டு செயலிழந்துவிட்டதா?… மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?

08:02 AM Nov 22, 2023 IST | 1newsnationuser3
உங்க பான் கார்டு செயலிழந்துவிட்டதா … மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி
Advertisement

நாடு முழுவதும் சுமார் 11.5 கோடி பான் கார்டுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுடைய பான் கார்டும் ரத்துசெய்தல் பட்டியலில் இருந்தால் கவலைப்பட வேண்டாம். சில விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் அதை மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம். நாடு முழுவதும் சுமார் 70.24 கோடி பான் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 57.25 கோடி பேர் உரிய தேதிக்குள் அதை ஆதார் கார்டுடன் இணைத்துள்ளனர். அப்படி இணைக்காதவர்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் இந்த பெரிய முடிவு எடுக்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் சுமார் 11.5 கோடி பான் கார்டுகளை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பான் கார்டுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

அரசு உத்தரவின்படி, பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிட்டால், அதை ஆக்டிவேட் செய்ய ஒரு வழி உள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறினால் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். முடக்கப்பட்ட உங்கள் பான் கார்டை மீண்டும் செயல்படுத்த விரும்பினால், வருமான வரித் துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட AO-க்கு (மதிப்பீட்டு அதிகாரி) நீங்கள் எழுதி கடிதம் அனுப்ப வேண்டும்.

ரத்து செய்யப்பட்ட பான் கார்டை மீண்டும் செயல்படுத்த தேவையான ஆவணங்கள் கடிதத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதனுடன், செயலில் உள்ள பான் எண்ணுக்கு கடந்த மூன்று வருட வருமான வரிக் கணக்கின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். கடிதத்தை சமர்ப்பித்த பிறகு பான் கார்டை மீண்டும் செயல்படுத்த குறைந்தது 10 முதல் 15 நாட்கள் ஆகும். உங்கள் பான் கார்டு செயல்படுத்தப்படும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

Tags :
Advertisement