லட்சத்தில் வருமானம்.. காளான் தொழில் தொடங்குவது எப்படி? எவ்வளவு செலவாகும்?
அண்மைக்காலமாக காளான் வளர்ப்புத் தொழிலில் வேகமாகப் பரவி வருகிறது. அதன் சுவை, ஊட்டச்சத்து மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே முதலீடு செய்து காளான் வளர்த்தல் மற்றும் பதப்படுத்தல் தொழிலில் அபரிமிதமான லாபத்தை ஈட்டலாம் என்று தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். காளான் பண்ணை நிறுவ என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. எவ்வளவு செலவாகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காளான் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தல் தொழிலுக்கு கீழ்கண்ட முதலீடு தேவைப்படுகிறது..
நிலம்- வாடகை அல்லது சொந்தம் கட்டடம்
கட்டுமான செலவு- ரூ5 லட்சம்
ஆலை மற்றும் உபகரணங்கள்- ரூ.8 லட்சம்
பர்னிச்சர்கள்- ரூ.69,000
முன்தொடக்க செலவுகள்- ரூ.50,000
மொத்தம்- ரூ.20 லட்சம்
முதலீட்டுக்கான வழிகள் :
சுய முதலீடு ரூ.2 லட்சம்
டெர்ம் லோன்- ரூ.12.77 லட்சம்
உற்பத்திக்கான மூலதன பைனான்ஸ்-ரூ.5.22 லட்சம்
மொத்தம்- ரூ.20 லட்சம்
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய திட்ட குறிப்பின்படி, நீங்கள் முதல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டில் பெறும் விற்பனை முறையே தலா ரூ.76.95 லட்சம், ரூ.93.83 லட்சம், ரூ.107 கோடி, ரூ.120 கோடி மற்றும் ரூ.134 கோடி ஆகும். இதில் நிகர லாபம் முதலாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு நான்காமாண்டு மற்றும் ஐந்தாமாண்டில் முறையே ரூ.8.90 லட்சம், ரூ.11.32 லட்சம், ரூ.14.51 லட்சம், ரூ.17.55 லட்சம் மற்றும் ரூ.20.44 லட்சம் பெறலாம்.
லைசன்ஸ் பெறுவது கட்டாயம் ; தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் எந்தப் பகுதியிலும் காளான்களை வளர்ப்பதற்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகமான CFTRI வசதி செய்து தந்துள்ளது. இதற்கான தொழில்நுட்பம் CFTRI-யிடம் உள்ளது. காளான் தொழிற்கூடங்களில் உணவுக் கலப்படத் தடை சட்டத்தின் பிரிவுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். முதலில் காளான் வளர்ப்புத் தொழிலுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் லைசென்ஸைப் பெற வேண்டும். காளான் வளர்ப்புத் தொழில் உணவு பாதுகாப்பு சட்டம் 2006இன் கீழ் வருகிறது.