உங்க அக்கவுண்ட்ல பணம் குறைஞ்சிக்கிட்டே வரும்..!! கவனிச்சீங்களா..? ஏன் தெரியுமா..?
Google Pay மூலம் செல்போன் நம்பருக்கு ரீ - சார்ஜ் செய்யும் போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நடைபாதை, சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தொடங்கி மல்ட்டிபிளக்ஸ் மால்கள், சினிமா தியேட்டர்கள் வரை அனைத்திலும் பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி உள்ளது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் தற்போதைய நாட்களில் இதனை மேலும் மேம்படுத்தவும், எளிதான நடைமுறையில் பரிவர்த்தனை செய்யவும் டிஜிட்டல் செயலிகள் வந்துவிட்டன.
யுபிஐ வசதி இலவசமாக இருந்து வந்த நிலையில், சில காலமாக கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தான், Google Pay நிறுவனம் இந்த Convenience Fee கட்டணத்தை வெறும் மொபைல் ரீசார்ஜ்-க்கு மட்டுமே வசூலித்து வருகிறது. மற்றபடி, பொதுவாக நபர்களுக்கு அல்லது கடைகளுக்கு செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
ரீ - சார்ஜ் செய்யும் போது கூகுள் நிறுவனம் அதற்கான கட்டணத்தை வசூலித்து நமது அக்கவுண்ட்டில் இருந்து வசூலித்து வருகிறது. இது நம்மில் பலருக்கு தெரியாமலே இருந்து வருகிறது. இதற்கு முன் Phone Pe, PayTM 'Platform Fee' என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.