For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இளைஞர்களே தவறவிடாதீர்கள்!… மத்திய ஆயுதப்படையில் வேலை!… உடனே விண்ணப்பியுங்கள்!

07:05 AM Apr 27, 2024 IST | Kokila
இளைஞர்களே தவறவிடாதீர்கள் … மத்திய ஆயுதப்படையில் வேலை … உடனே விண்ணப்பியுங்கள்
Advertisement

Jobs: மத்திய ஆயுதப்படை பிரிவுகளில் காலியாக உள்ள 506 கமாண்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.

Advertisement

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மத்திய ஆயுத படைப் பிரிவுகளில் (CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS)) காலியாக உள்ள உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 506 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 21.05.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

என்னென்ன பிரிவுகளில் எவ்வளவு காலியிடங்கள், எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் என்ன போன்ற அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம். எல்லைப் பாதுகாப்புப் படை BSF 186, மத்திய ரிசர்வ் போலீஸ் படை CRPF 120, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை CISF 100, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ITBP 58, சசாஸ்த்ரா சீமா பால் SSB 42 என மொத்தம் 506 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதிய பாதுகாப்பு காவல் படையில் உதவி கமாண்டர் பணியில் சேர குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். காவல் படைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள உடல் தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதிகள் பெறவில்லை எனில் உடல் தகுதி தேர்வு அல்லது மருத்துவ தேர்வில் தோல்வியடைய நேரிடும். NCC பி அல்லது சி சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்களுக்கு நேர்முகத் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுத் தகுதி: 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ 200. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2024. இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

Readmore: ஒரே நாளில் ரூ.1,000 ரூ.20 லட்சமாக மாறிய வருமானம்!… கவனத்தை ஈர்த்த கோடக் வங்கி!

Advertisement