லஞ்ச் பாக்ஸில் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா? எப்படி தவிர்ப்பது?
உணவு ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு எடுத்துக்கொண்டாலும் மதியத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு அதிக அளவுடன் அதிக ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அவ்வாறு உண்ணப்படும் மதிய உணவு பெரும்பாலும் பள்ளிகளிலும், பணிபுரியும் இடத்திலும் பெரும்பாலானோரால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு உணவை எடுத்து செல்ல லஞ்ச் பாக்ஸை பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு உணவு எடுத்து செல்லும் லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து சில சமயங்களில் துர்நாற்றம் வீசுவதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். அவ்வாறு வரும் துர்நாற்றத்தை போக்குவதற்கான எளிய வழிமுறைகளை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
சுத்தம் செய்த முன்னும் பின்னும் திறந்தே வைக்க வேண்டும்: கழுவிய பின் பாட்டில்களையும், லஞ்ச் பாக்ஸ்களையும் மூடுவது பலரின் பழக்கம். இருப்பினும், இது உடனடியாக வாசனையை அகற்றாது. நீங்கள் அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.. அப்படி கழுவிய பின் திறந்து வைக்க வேண்டும். மேலும், நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் அந்த மதிய உணவுப் பாக்ஸ் மற்றும் பாட்டில்களைத் திறப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
ஒயிட் வினிகர் பயன்படுத்துங்கள் : ஒயிட் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் துர்நாற்றத்தை உருவாக்க கூடிய பாக்டீரியாவை அழித்து, லஞ்ச் பாக்ஸில் இருந்து வீசும் கெட்ட வாசனையை அகற்ற உதவுகிறது. பருத்தி துணி அல்லது பேப்பர் டவலை வினிகர் கலந்த தண்ணீரில் நனைத்து, லஞ்ச் பாக்ஸுக்குள் சிறிது நேரம் வைத்திருக்கவும். அதன் பின்னர் திறந்து பார்த்தால் துர்நாற்றம் மாயமாய் மறைந்திருப்பதை உணர முடியும்
உருளை கிழங்கு வைத்து சுத்தம் செய்தல் : உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, சுத்தம் செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா. லஞ்ச் பாக்ஸ்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க உருளைக்கிழங்கு மிக முக்கியமாக பயன்படுகிறது. அதற்கு முன்னதாக உருளைக்கிழங்கின் மீது சிறிது உப்பைத் தடவிய பின்னர் லஞ்ச் பாக்ஸின் உள்ளே தேய்த்து சுமார் 15-20 நிமிடங்கள் ஊற விட வேண்டும். அதன் பிறகு பாக்ஸை கழுவினால் துர்நாற்றம் வராது.
இலவங்கப்பட்டை வைத்து சுத்தம் செய்தல் : டிபன் பாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் இலவங்கப்பட்டையை உபயோகிப்பதன் மூலம் எளிதாக நீக்கலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது டிபன் பாக்ஸ் மற்றும் பாட்டில்களில் இருந்து வரும் வாசனையைக் குறைக்க உதவுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் மற்றும் இலவங்கப்பட்டை போட்டு கொதிக்க விடவும். இந்த தண்ணீரை டிபன் பாக்ஸில் அல்லது பாட்டிலில் ஊற்றி, பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே விடவும். அதன் பிறகு, அவற்றை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்..
எலுமிச்சம்பழம் வைத்து சுத்தம் செய்தல் : எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அதன் தோலைத் தூக்கி எறிவோம். உண்மையில், எலுமிச்சை தோல்கள் சுத்தம் செய்வதில் உதவியாக இருக்கும். எலுமிச்சைத் தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் டிபன் பாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி aதனை முழுவதுமாக நீக்குகிறது. இந்த முறைக்கு, புதிய எலுமிச்சை தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, இந்த தண்ணீரை டிபன் பாக்ஸில் வைத்து, சுமார் அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இறுதியாக, தண்ணீர் உதவியுடன் டிபன் பாக்ஸை சுத்தம் செய்யவும்.
பேக்கிங் சோடாவை பயன்படுத்தவும் : ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் எளிதாக கிடைக்கக்கூடிய பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி கறைகளை மட்டுமல்ல, லஞ்ச் பாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் அகற்ற முடியும். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். அதனை லஞ்ச் பாக்ஸிற்குள் அப்ளே செய்து, 10-12 நிமிடங்கள் ஊறவிடவும். அதன் பின்னர் பேப்பர் டவல் கொண்டு லஞ்ச் பாக்ஸை சுத்தப்படுத்தினால், துர்நாற்றமும் அதனுடன் சேர்ந்து வெளியேற்றப்படும்
Read more ; “உல்லாசமா இருந்தா போதும், குழந்தை வேண்டாம்”; பெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்..