காதலனுடன் அக்கா உல்லாசம்.! 2 பிஞ்சு தங்கைகள் அடுத்தடுத்து கழுத்தறுத்து படுகொலை.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் காதலனுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்ததா சொந்த சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 19 வயது இளம்பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அஞ்சலி. இவருக்கு சுரபி(6) மற்றும் ரோஷினி(7) என்ற இரண்டு சகோதரிகள் இருந்தனர். அஞ்சலி தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று அஞ்சலியின் பெற்றோர் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று இருக்கின்றனர். அஞ்சலியும் அவரது இளம் சகோதரிகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ரோஷினி மற்றும் சுரபி வெளியே விளையாட சென்ற போது அஞ்சலி தனது காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது திடீரென அவரது சகோதரிகள் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத காதலர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். தனது சகோதரிகள் நடந்ததை பெற்றோரிடம் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அஞ்சலியும் அவரது காதலரும் சேர்ந்து சுரபி மற்றும் ரோஷினியை கோடாரையால் கழுத்தில் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். மேலும் தடயங்களை அழிக்கவும் முயன்று இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் அதிர்ச்சியான உண்மை வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஞ்சலியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.