30 துண்டுகளாக இளம்பெண்ணின் உடல்..!! உறுப்புகளை இணைத்து போஸ்ட் மார்ட்டம்..!! பெங்களூருவை உலுக்கிய கொலை..!!
பெங்களூருவில் இளம்பெண் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (29) என்ற பெண், தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 2ஆம் தேதியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு விரைந்தனர். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அவர்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், அங்கு விரைந்த காவல்துறையினர், வீட்டை திறந்து பார்த்தபோது, மகாலட்சுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் 30 பாகங்களாக துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்து, உடல் பாகங்களை 30 துண்டுகளாக வெட்டியது தெரியவந்தது.
இந்த போஸ்ட் மார்ட்டமானது போலீசாருக்கே மிகப்பெரிய சவாலாக விளங்கியது.
இதில், மகாலட்சுமியின் தலை மட்டும் 3 பகுதிகளாக வெட்டப்பட்டிருந்ததாம். அவரது கால்கள் துண்டிக்கப்பட்டு, குடல், தலைமுடி உள்ளிட்ட பிற பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் தனியாக கட்டப்பட்டிருந்ததாம். மொத்த உடல் உறுப்பு துண்டுகளையும் மருத்துவர்கள் ஒன்றிணைத்து இந்த சிக்கலான போஸ்ட் மார்ட்டத்தை நடத்தியுள்ளனர்
உடல் பாகங்களை வரிசை எண் போட்டு மருத்துவர்கள் ஒன்று சேர்த்துள்ளனர். அதில் ஏதேனும் பாகங்கள் விடுபட்டுள்ளதா..? என்றும் அதன் பிறகு உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா..? என்றும் பார்க்கப்பட்டது. அதேபோல, மகாலட்சுமி தான் என்பதை அடையாளம் காண உடல் பாகங்கள் தனித்தனியாக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது பிளாஸ்டிக் கவரில் இருந்த உடல் பாகங்களை ஒன்றாக சேர்த்து சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மிகவும் போராடியே இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை மருத்துவர்கள் தயாரித்துள்ளனர்.
இதற்கிடையே, பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவருடன் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், மகாலட்சுமியை தினமும் அழைத்துச் சென்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.
அந்த இளைஞரை பற்றி விசாரிக்க தொடங்கினர். அப்போது அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும், போலீசார் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போனை கைப்பற்றினர். அடிக்கடி மகாலட்சுமியின் செல்போன் எண்ணில் இருந்து தலைமறைவான மேற்கு வங்க இளைஞர் செல்போனுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த பெண் கொலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மகாலட்சுமியின் கணவர் தெரிவித்துள்ளார். அந்த இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.