Uttar Pradesh : மசூதி ஆய்வுக்கு எதிரான வன்முறையில் 3 பேர் பலி..!! - நீடிக்கும் பதற்றம்!
உத்தர பிரதேசத்தில் ஜமா மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. சம்பல் ஷாஜி ஜமா மசூதி இந்து கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது, இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் குழு சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றது. அவர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மசூதி பகுதியில் திரண்டு அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அரசு அதிகாரிகள் வந்த வாகனம் தீ வைத்தும் எரிக்கப்பட்டது. இதனால் சம்பல் ஷாஜி ஜமா மசூதி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்தில் 3பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்தனர். வன்முறைக்கு மத்தியிலும் ஆய்வு குழுவினர் மசூதியை ஆய்வு செய்து முடித்தனர். நவம்பர் 29 ஆம் தேதி ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வு குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர். இந்நிலையில் சம்பல் பகுதியில் இணையச் சேவைகள் 24 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.
Read more ; இன்ஸ்டா காதலனுடன் 2-வது திருமணம்..!! தடையாக இருந்த 5 வயது குழந்தை..!! மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி..!!