முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"கல்யாணம் பண்ணா, புருஷன் வீட்ல சமைக்கணும்" விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..

young woman committed suicide in the fear of getting married
05:28 PM Jan 12, 2025 IST | Saranya
Advertisement

சென்னை அம்பத்தூர் அருகே இருக்கும் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான நிவேதா. 2000 ஆம் ஆண்டு, இவரது தந்தை பாலாஜி விபத்தில் உயிரிழந்தார். மேலும், இவரது தாய், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் நிவேதாவும், அவரது தம்பி 25 வயதான சந்திரபாபுவும் ஒரகடத்தில் உள்ள அவர்களின் தாய் மாமா வீட்டில் வசித்து வருகின்றனர். அக்கா, தம்பி இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 1 வருடத்திற்கு முன்பு, தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் நிவேதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, வருகிற ஜனவரி 19ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

Advertisement

இந்நிலையில், அம்பத்தூரில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்ற நிவேதா, மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து, நிவேதாவின் தம்பி சந்திரபாபு அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமணம் முடிந்து, கணவர் வீட்டில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய தனக்கு தெரியாது என்று கூறி நிவேதா கடந்த சில நாட்களாகவே புலம்பியுள்ளார். மேலும், அதிக மன அழுத்தத்தில் இருந்த அவர், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், திருமணத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்திரபாபு குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில், பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதையடுத்து, அம்பத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: செல்ஃபி மோகத்தால் விபரீதம்!. நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழப்பு!. தெலுங்கானாவில் சோகம்!

Tags :
ambatturSuicideyoung woman
Advertisement
Next Article