அடேங்கப்பா பெரிய மனசு சார் உங்களுக்கு.. பொங்கல் பரிசாக இலவச வீட்டுமனை வழங்கிய உரிமையாளர்..!!
உழைப்பின் வரலாறு தான் மனித சமூகத்தின் வரலாறு என்ற கூற்றை கேள்வி பட்டிருப்போம். உழைப்பு என்பது தனிமனித நடவடிக்கை அல்ல. அதனிடம் சமூகப் பண்பு உள்ளது. முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, உழைப்பைச் செலுத்தும் தொழிலாளிகளுக்கும் பங்கு தர வேண்டும் என்கிற நோக்கில் 1965ம் ஆண்டு தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இலாபத்தின் அடிப்படையில் கட்டாயம் போனஸ் வழங்கப்பட வேண்டும்.
முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு போனஸ் வழங்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. தற்போதைய திருத்த சட்டத்தின் படி கட்டணம், போனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து மாதத்திற்கு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, உங்களது மாதச் சம்பளம் ரூ.21 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு போனஸ் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ராம நாதபுரத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் மூவருகு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனையை போனசாக கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தனியார் நிறுவனம். அடேங்கப்பா பெரிய மனசு சார் உங்களுக்கு என சோசியல் மீடியாவில் நெட்டிசங்கள், கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களையும் கொஞ்ச கவனிங்க பாஸ் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Read more ; “மத்தவங்க முன்னாடி நான் உடை மாத்திருக்கேன்” நடிகை ஷகிலா ஓபன் டாக்!