"வேற ஒருத்தன லவ் பண்ணா, என்கூட உல்லாசமா இருக்க மாட்டியா?" மாமாவால், கழிவறையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..
கர்நாடக மாநிலம், பெங்களூர் கேஆர் புரத்தில் இருக்கும் எஸ்விஎஸ் பாரடைஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சுஹாசி சிங். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து இவர், தற்போது தனது அத்தையின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது அத்தையின் கணவரான ப்ரவீன் சிங் என்பவருக்கும், சுஹாசி சிங்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில், இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்துள்ளனர்.
இதனிடையே, ஒரு கட்டத்தில் சுஹாசிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பிரவீனிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், சுஹாசியை தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், நாம் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை சமூகவளைதலத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சுஹாசி, கடந்த ஜனவரி 12 ஆம் தேதி, பிரவீனுடன் தனியாக விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பிரவீன் தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு சுஹாசியை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் இதற்கு சுஹாசி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், இருவரும் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுஹாசி, பெட்ரோல் வாங்கி வந்து, கழிவறையில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சுஹாசியை மீட்ட பிரவீன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து பிரவீணை கைது செய்துள்ளனர்.
Read more: மத்திய பட்ஜெட் 2025 | தனிநபர் வருமான வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்பு..!! – ICRA அறிக்கை