அட்டகாசம்...! பெண்களுக்கு மாதம் ரூ.2,500... கர்ப்பிணிகளுக்கு ரூ.21,000.. பாஜக கொடுத்த வாக்குறுதி...!
பெண்களின் செழிப்புக்கான திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) மூலம் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். மேலும், எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு அவர்களுக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலை முன்னிட்டு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் நட்டா இன்று வெளியிட்டார்.
பாஜக முக்கிய வாக்குறுதி
பெண்களின் செழிப்புக்கான திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) மூலம் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். மேலும், எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும்.
ஜேஜே கிளஸ்டர்களில் ரூ.5-க்கு சத்தான உணவு வழங்க அடல் கேன்டீன்கள் அமைக்கப்படும் என்றும், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியமும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியமும் வழங்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு அவர்களுக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.