For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேறொருவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி…! சந்தேகித்த கணவன்…! மனைவி எடுத்த விபரீத முடிவு

08:29 PM Nov 21, 2023 IST | 1Newsnation_Admin
வேறொருவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி…  சந்தேகித்த கணவன்…  மனைவி எடுத்த விபரீத முடிவு
Advertisement

கணவருக்கு தன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

கும்மிடிப்பூண்டி அருகே ராமச்சந்திராபுரத்தில் உள்ள தனியார் ரெடிமேட் ஆடை தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் நேபாளத்தைச் சேர்ந்த பாபின் குருங். இவருடன் இவரது மனைவி அமிகா குருங். இந்நிலையில் அமிகா குருங் செல்போனில் வேறொருவருடன் நீண்ட நேரம் பேசி வந்ததாக தெரிகிறது.

இதனை பாபின் கண்டித்து இருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பிய போது அவரது மனைவி துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கணவர் தனது நடத்தையில் சந்தேகம் கொண்டதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement