For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியால் விரக்தி அடைந்த மைம் கோபி..!! அவரு சொன்ன காரணத்தை பாருங்க..!!

Mime Gopi, who emerged as the title winner on Cook with Komali Season 4 on Vijay TV, has openly spoken about her experience on the show.
06:36 PM Jun 28, 2024 IST | Chella
 குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியால் விரக்தி அடைந்த மைம் கோபி     அவரு சொன்ன காரணத்தை பாருங்க
Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஜெயித்த மைம் கோபி, அந்நிகழ்ச்சியின் அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Advertisement

விஜய் டிவியில் பெரிய அளவில் பெயர் வாங்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் டைட்டில் வின்னராக மைம் கோபி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த நிகழ்ச்சி பற்றி முதல் முறையாக இப்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, “நான் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவும் சந்தோஷமான நாட்கள் என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான் சொல்வேன். ஏதாவது ப்ரோக்ராமில் கலந்து கொண்டு டென்ஷனாக இருந்தால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போதும் எல்லா டென்ஷனும் போய்விடும். என்னுடைய வாழ்க்கையில் சொர்க்கம் என்றாலும், நரகம் என்றாலும் அந்நிகழ்ச்சியை தான் சொல்லுவேன். காரணம் கோமாளிகள் சில நேரங்களில் பாடாய்படுத்துவார்கள்.

அதுவும் நன்றாக இருக்கும். நம்முடைய கஷ்டங்கள் மறந்து போகும் இடம் அந்த இடம்தான். அந்த நிகழ்ச்சிக்கு நான் போகும்போது எல்லோரிடமும் வணக்கம் சொல்லிவிட்டு பேச தொடங்கி விடுவேன். அங்கிருந்த லைட் மேன் முதல் துடைக்கிறவங்க வரை எல்லோருமே கலகலப்பாக இருப்பார்கள். அதுபோல ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் இருப்பார்கள். நான் செய்யும் சாப்பாடு எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள். அந்த நிகழ்ச்சி முடிந்த ஒரு சில வாரங்கள் எனக்கு ரொம்பவும் டிப்ரசனாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் விரக்தி அடைஞ்சேன் என்று தான் சொல்ல வேண்டும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முடிவால் என்னுடைய கேரக்டர் சில வாரங்களில் ரொம்பவே மாறியது எனக்கே தெரிந்தது. அந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் அவ்வளவு அழகாக அறிவுரை சொல்லுவார். அப்பா தாமுவே சொல்லவே வேண்டாம் அவரும் சப்போர்ட் பண்ணுவார். கோமாளிகளும் நம்முடைய மனநிலையை அறிந்து கலகலப்பாக மாற்றி விடுவார்கள். நான் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பது என்னுடைய வாழ்க்கையில் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் மகிழ்ச்சியான தருணம்” என பேசியிருக்கிறார்.

Read More : கட்டட மேஸ்திரியுடன் உல்லாசம்..!! கழற்றிவிட முயன்ற பெண்..!! சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

Tags :
Advertisement