இளம் விக்கெட் கீப்பரான தல தோனி!… ருதுராஜ் ஜெய்க்வாட் புகழாரம்!
CSK: இளம் விக்கெட் கீப்பர் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர் சென்னை அணியின் வெற்றிக்கு உதவியதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வேடிக்கையாக புகழாரம் சூட்டியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வெற்றிக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் (தோனி) விளாசிய அந்த மூன்று சிக்ஸர்கள் எங்களுக்கு பெரிதும் உதவியது. இரண்டு இன்னிங்ஸுக்குமான வித்தியாசம் அதுதான். இந்த மாதிரியான ஆடுகளங்களில் கூடுதலாக எடுக்கப்படும் அந்த 10-15 ரன்கள் அணிக்கு தேவையானது” என தோனி குறித்து வேடிக்கையாக கேப்டன் ருதுராஜ் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பும்ரா சிறப்பாக பந்துவீசி இருந்தார். எங்கள் அணியின் மலிங்கா (பதிரனா) அபாரமாக பந்து வீசி இருந்தார். யார்க்கர்களை துல்லியமாக வீசினார். துஷார் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். அதை நாம் மறக்கக் கூடாது. ரஹானே ஃபிட்னெஸ் ரீதியாக லேசான பின்னடைவை எதிர்கொண்டு உள்ளார். அதனால் அவரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கினால் சரியாக இருக்கும் என யோசித்தேன். நான் எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் பேட் செய்வேன். அது எனக்கு சரி வரும். அதோடு அணியின் கேப்டன் என்ற பொறுப்பிலும் அந்த முடிவை நான் எடுத்திருந்தேன்” என தெரிவித்தார்.
Readmore: என்னா அடி!… தோனியின் வானவேடிக்கை!… அதிர்ந்த வான்கடே!… பத்திரனாவின் பந்துவீச்சில் சுருண்ட மும்பை!