For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!

06:10 AM Nov 19, 2023 IST | 1newsnationuser2
10  11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ  மாணவியர்களுக்கு    தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Advertisement

முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தெரிவு செய்து அந்த மாணவ, மாணவியர்களுக்கு இளம் கவிஞர் விருது" மற்றும் பரிசுகள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 2023 நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் கல்வி மாவட்ட அளவில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி, அதில் சிறந்த 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளை தெரிவு செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மேற்படி ஒன்றிய அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு வருவாய் மாவட்ட அளவில், 23.11.2023 வியாழக் கிழமை அன்று கவிதைப் போட்டியினை நடத்தி, அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து அம்மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர். பயிலும் பள்ளி, மாவட்டத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றினை 23.11.2023 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் msecondsgmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வருவாய் மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டி எதிர்வரும் 30.11.2023 அன்று சென்னை-8. எழும்பூர். மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்படி மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ / மாணவியர்களை 30.11.2023 வியாழக்கிழமையன்று காலை 9.00 மணியளவில் சென்னை-8, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு உரிய பாதுகாவலருடன் வருகை தரும் வகையில் தகுந்த ஏற்பாடுகள் மற்றும் அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேற்படி 30.11.2023 வியாழக் கிழமையன்று காலை 9.00 மணியளவில் சென்னை-8. எழும்பூர். மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் "இனம் கவிஞர் விருது" கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான இடவசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரவும் மற்றும் மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் படைப்புகளிலிருந்து மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை நடுவர்கள் மூலம் தெரிவு செய்து அவர்களின் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் படைப்புகளிலிருந்து மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு இளம் கவிஞர் விருது" வழங்கி சிறப்பிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement