இளைஞர்களே அசால்ட்டா இருக்காதீங்க..!! ஆண்டுக்கு ஒரு முறையாவது இதை பண்ணுங்க..!!
இளைஞர்களிடையே சிறுநீரக பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆண்டுக்கு ஒருமுறை அனைவரும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தற்போது தொற்று நோய்களின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
குறிப்பாக சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை உருவாக்கும். சமூகத்தில் 17 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயும், 24 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் 3இல் ஒரு பங்கு மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இளைஞர்கள் அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், இளைஞர்கள் உட்பட அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணவு முறைகளை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.