For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளக்காதலனுடன் கலகல பேச்சு..!! திடீரென பேச்சை நிறுத்தியதால் வெறியான இளைஞர்..!! நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!

Devikala has been talking to Lingaraja (24) for the past two years. Recently, Devikala has stopped talking to Lingaraja because his speech has become erratic.
02:57 PM Nov 26, 2024 IST | Chella
கள்ளக்காதலனுடன் கலகல பேச்சு     திடீரென பேச்சை நிறுத்தியதால் வெறியான இளைஞர்     நடுரோட்டில் நடந்த பயங்கரம்
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அகரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சந்திரலிங்கம். இவருக்கு வயது 42. இவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கியிருந்து வெல்டிங் வேலை செய்து வந்தார். அப்போது, மாற்று சமுதாயத்தை சேர்ந்த தேவிகலா (37) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில், லிங்கராஜா (24) என்பவருடன் தேவிகலா கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசி வந்துள்ளார். சமீப காலமாக லிங்கராஜா பேச்சு சரியில்லாததால் அவருடன் பேசுவதை தேவிகலா நிறுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் தேவிகலா தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த லிங்கராஜா, என்னுடன் ஏன் பேசுவதில்லை என தேவிகலாவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அவர் சரியாக பதிலளிக்காத நிலையில், ஆத்திரமடைந்த லிங்கராஜா தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து தேவிகலாவை சரமாரியாக குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால், லிங்கராஜா தப்பியோடினார். இதற்கிடையே, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவிகலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தேவிகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் ஏரல் எஸ்ஐ முகமதுரபீக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு லிங்கராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : ஃபெங்கால் புயல் எப்போது எந்த இடத்தில் கரையை கடக்கிறது தெரியுமா..? பாதிப்பு எப்படி இருக்கும்..?

Tags :
Advertisement