முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இளைஞர்களே!… பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைப்பதால் விந்தணுக்கள் குறையுமா?… ஆய்வில் அதிர்ச்சி!

11:45 PM Nov 10, 2023 IST | 1newsnationuser3
Advertisement

செல்போன் பயன்பாட்டால் கடந்த 50 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருப்பதாக வெளியான தகவல் ஆண்கள் வெளியான தகவல் ஆண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக யுனிவர்சிட்டி ஆப் ஜெனிவா நடத்திய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. அந்த ஆய்வில், 18 முதல் 22 வயதிற்குட்பட்ட ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு நாளைக்கு 20 முறைக்கு முறைக்கு மேல் செல்போன் பயன்படுத்தியதில் , ஒட்டுமொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு 21 சதவீதம் இருந்தது தெரியவந்துள்ளது.

அதே நேரம், பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்திருப்பதற்கும் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல், நவீன 4G, 5G ஸ்மார்ட் போன்களை விட பழைய 2G, 3G பட்டன் போன்களே ஆண்களை அதிகம் பதம்பார்ப்பதாக மற்றொரு சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்டுள்ளது யுனிவர்சிட்டி ஆப் மான்சிஸ்டர் நிறுவன ஆய்வு. ஆனால் இதை எப்படி என்று விவரிக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து இது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் குறுஞ்செய்தி அனுப்பும் போதும், பெரிய கோப்புகளைப் பதிவிறக்கும் போதும், ஆடியோ மற்றும் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் போதும் radio frequency electromagnetic field கதிரியக்கம் குறைவதும்… அதுவே ஓடும் பேருந்தில், காரில் மொபைல் பயன்படுத்தும் போது, இந்த கதிரியக்கம் அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்கள் தங்களின் இடுப்பு பகுதியை அதிகம் வெப்பமடையாமல் பார்த்து கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்துகிறது

Tags :
ஆய்வில் அதிர்ச்சி!செல்போன்பேண்ட் பாக்கெட்விந்தணுக்கள் குறையுமா?
Advertisement
Next Article