மாதம் ரூ.20,500 வழங்கும் சேமிப்புத் திட்டம்.. இந்த அஞ்சலக திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500 மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சம்பளமாக ஒவ்வொரு மாதமும் டெபாசிட் தொகை கிடைத்தால், இதை விட வேறு என்ன இருக்க முடியும். அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.20,500 கிடைக்கும். இதனால் நீங்கள் வீட்டுச் செலவுகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களைக் கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் ஒய்வுபெற்ற பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக, இந்த திட்டம் அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்படும். அதாவது, இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500 வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற முடியும். மேலும் சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் இதன் பலனை பெறலாம்.
இத்திட்டத்தில் இணையும் நபர்கள் 1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதவாது பயனர்கள் 1,000 ரூபாய் முதல் 30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசு 8.2% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனர்களின் கணக்கில் செலுத்தப்படும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுவார்கள்.
Read more ; உலகின் முதிய பெண்மணி 117 ஆவது வயதில் காலமானார்..!!