For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இளைஞர்களே!… ஆணுறுப்பில் மரு போன்று இருக்கா?… புற்றுநோய் ஆபத்து எச்சரிக்கை!

05:35 AM May 11, 2024 IST | Kokila
இளைஞர்களே … ஆணுறுப்பில் மரு போன்று இருக்கா … புற்றுநோய் ஆபத்து எச்சரிக்கை
Advertisement

Penile cancer: பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கு ஆணுறுப்பு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இந்தியாவில் புற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் 14.61 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025இல் 15.7 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது எனவும் அந்த அறிக்கை கூறியது. இதில் ஆண்கள் அதிகமாக நுரையீரல், வாய் மற்றும் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு அதிகமாக மார்பகம், கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாகவும் எச்சரித்துள்ளது. குறிப்பாக 2023ஆம் ஆண்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

இந்தநிலையில், பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கு ஆணுறுப்பு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அந்த நபர், 2018 -ஆம் ஆண்டில், தனது ஆணுறுப்பில் மரு போன்று ஏதோ இருப்பதை கவனித்தார். இதையடுத்து பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் அளிக்கவில்லை. தடிமனான தோல் அல்லது சில மருந்துகளின் பக்க விளைவாக ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது 63 வயதான அவர், அந்த மருவால் ஏற்பட்ட விளைவுகளை நினைவுக் கூர்ந்துள்ளார். அதில், மருந்துகள் உட்கொண்ட போதிலும் அந்த மருவின் வளர்ந்துகொண்டே இருந்தது. இது அவரது திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியது. அவருக்கும் மனைவிக்கும் இடையில் தாம்பத்யம் முற்றிலும் இல்லாமல் போனது. நாங்கள் கணவன் மனைவியாக இல்லாமல், உடன்பிறப்புகளைப் போல வாழத் தொடங்கினோம், என்று வேதனை தெரிவித்தார்.

5 ஆண்டுகளாக பல மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஒரு நோயறிதல் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அவருக்கு 'ஆணுறுப்பு புற்றுநோய்' இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தலை துண்டிக்கப்பட்டது போல் உணர்ந்தாக குறிப்பிட்டுள்ளார்.

ஆண்குறி புற்றுநோய் அரிதானது. ஆனால் உலகம் முழுவதும் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, பிரேசிலில் ஆண்குறி புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அங்கு, 1 லட்சம் ஆண்களில், 2.1% பேருக்கு இந்தப் புற்றுநோய் உள்ளது.

2012 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிரேசில் நாட்டில் 21,000 ஆண்குறி புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இதன் விளைவாக 4,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன. கடந்த பத்தாண்டுகளில், 6,500-க்கும் மேற்பட்ட ஆண்குறி புற்றுநோயாளிகளுக்கு உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்குறி புற்றுநோய், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், ஆண்குறியின் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டியிருக்கும். மேலும் ஆணுறுப்புக்கு அருகில் உள்ள விதைப்பைகள் போன்ற பிற பிறப்புறுப்பு உறுப்புகளையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்குறி புற்றுநோயின் அறிகுறிகள்: ஆணுறுப்பில் ஆறாத புண்கள் ஏற்படுவது, ஆணுறுப்பிலிருந்து கடுமையான நாற்றம் கொண்ட திரவம் வெளியேறுவது, இறுக்கமான நுனித்தோல் இருப்பது, புகைபிடித்தல் ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படலாம்." ஒரு ஆண் தன் ஆணுறுப்பின் நுனித்தோலை சரியாக சுத்தம் செய்யத் தவறினால், அதில் சுரக்கும் ஒருவித சுரப்பு அதிகரித்துத் தேங்கி, அது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கிறது. இது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், அது புற்றுநோய் கட்டியாக மாறும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Readmore: பிரண்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? கெட்ட கொழுப்பையும் அசால்ட்டா குறைச்சிடும்..!!

Advertisement