For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"வா டி, உல்லாசமா இருக்கலாம்"; ஆசையாய் அழைத்த காதலன்; ஆற்றங்கரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

young-man-killed-his-lover-for-rejecting-physical-intercourse
05:57 PM Dec 05, 2024 IST | Saranya
 வா டி  உல்லாசமா இருக்கலாம்   ஆசையாய் அழைத்த காதலன்  ஆற்றங்கரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம், செராய்கேளா கார்ஸ்வான் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான மனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வாரம் இவர் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மனிஷாவின் 19 வயது காதலனை கைது செய்து விசாரித்தனர்.

Advertisement

விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலமளித்த இளைஞன் கூறியதாவது: சம்பவத்தன்று, காதலர்கள் இருவரும் ஆற்றங்கரையில் சந்தித்துள்ளனர். ஆற்றங்கரையில் யாரும் இல்லாததால் தனது காதலியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பியுள்ளார். இதை பற்றி தனது காதலியிடம் கூறிய போது, அவர் உடலுறவுக்கு மறுத்துள்ளார். தான் நினைத்த போது தன்னால் உடலுறவு வைத்துக்கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில், வாலிபர் அங்கிருந்த கான்கிரீட் ஸ்லாபை கொண்டு மனிஷா தலையில் அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Read more: என்னது, தலையில் பூ வைத்தால், உடலில் உள்ள நோய் குணமாகுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

Tags :
Advertisement