மனைவிக்கு ரீல்ஸ் மோகம்..!! கணவனுக்கு வந்த சந்தேகம்..!! போர்வைக்குள் 3 குழந்தைகள்..!! கண்முன்னே நடந்த பயங்கர சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியின் லக்வாயா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சீமா. இவர்களுக்கு வன்ஷிகா (10), அன்ஷிகா (6), பிரியான்ஷ் (3) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், தம்பதிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. சீமாவின் நடத்தை மீது ராஜுவுக்கு நிறைய சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீமாவுக்கு ரீல்ஸ் பதிவிடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரீல்ஸ்களை பதிவிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில், அந்த ரீல்ஸ்களுக்கு பல்வேறு ஆதரவு கருத்துக்கள் கிடைத்தன. அதேபோல, தெரியாத எண்ணில் இருந்தெல்லாம் சீமாவுக்கு போன்கள் வந்துள்ளன. ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த ராஜு, இப்படி போன்கள் வருவதை பார்த்ததுமே மேலும் கொந்தளித்துள்ளார்.
இதனால் சீமாவிடம் முன்பை விட அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்றும், இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிவிட்டது. இதனால் ஆவேசமடைந்த ராஜு, சீமாவை செங்கல்லால் அடித்துள்ளார். இதில், அவர் மயங்கி கீழே சரிந்துவிட்டார். ஆனால், அப்போதும் ராஜுவின் ஆத்திரம் அடங்காமல், தன்னுடைய 3 குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி தூங்க வைத்தார். குழந்தைகளும் தன்னுடைய அப்பாவுக்கு பயந்து கொண்டு, போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, வெறுமனே கண்ணை மூடி படுத்துக் கொண்டனர்.
குழந்தைகள் தூங்கிவிட்டதாக நினைத்த ராஜு, சீமாவை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். ஆனால், இந்த கொடூரத்தை போர்வைக்குள் இருந்து 3 பெண் குழந்தைகளும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மனைவியை வெட்டி கொன்றதுமே, தன்னுடைய செல்போனையும், மனைவியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு ராஜூ அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பின்னர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, சீமாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தப்பிச்சென்ற ராஜுவை தேட ஆரம்பித்துள்ளனர். மகள்களின் கண்முன்னே மனைவையை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!! இனி தங்கப் பத்திர திட்டம் கிடையாது..!! மத்திய அரசு திடீர் முடிவு..!!