முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இளம் வயதில் அயர்லாந்து பிரதமரான சைமன் ஹாரிஸ்; பிரதமர் மோடி வாழ்த்து!

01:53 PM Apr 10, 2024 IST | Mari Thangam
Advertisement

அயர்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற சைமன் ஹாரிஸ்-க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அயர்லாந்தில் பிரதமராக பதவி வகித்த லியோ வராத்கர் கடந்த மாதம் தனிப்பட்ட காரணங்களால் பதிவியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சைமன் ஹாரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக போட்டியிட்டவருக்கு 69 வாக்குகளும் பதிவாகின.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் டூப்ளினில் உள்ள அதிபர் மாளிகையில் புதிய பிரதமராக 37 வயதே ஆன சைமன் ஹாரிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.  இவர் முன்னாள் சுகாதார மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கொரோனா பேரிடர் காலத்தில் சைமன் ஹாரிஸ் திறம்பட செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிக இளம் வயதில் பிரதமர் பதவியேற்றுள்ள சைமன் ஹாரிஸுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் “சைமன் ஹாரிஸ் அயர்லாந்தின் மிக இளம் வயது பிரதமராக தேவர்வாகி உள்ளதற்கு வாழ்த்துகள். ஜனநாயக விழுமியங்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நமது வரலாற்று உறவுகள் உயர்ந்த மதிப்புக்குரியது. இந்தியா - அயர்லாந்து இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Ireland Prime ministerPM ModiSimon Harris
Advertisement
Next Article