ஒருமணி நேரத்தில் 600 பேர் சுட்டுக்கொலை!. ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி!
ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் அல்-கொய்தா தீவிரவாதிகளால் ஒரு சில மணிநேரங்களில் 600 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள பர்சலோகோ நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளம் தோண்டும் பணியில் ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் நுழைந்த அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வரலாற்றில் மிக மோசமான நிகழ்வுகளில் ஒன்று என்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கோள்காட்டி CNN அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய மோதலை கண்காணிக்கும் ACLED பகுப்பாய்வு குழுவின் படி, அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர்களான இந்த அமைப்பு ஒசாமா பின்லேடனால் நிறுவப்பட்டது. இது, அமெரிக்காவில் 9/11 தாக்குதல்களை நடத்தியது. மேலும் இஸ்லாமிய அரசு குழு இந்த ஆண்டு சுமார் 3,800 பேரைக் கொன்றது. 2015 இல் மோதல் தொடங்கியதில் இருந்து, 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புர்கினா பாசோவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
Readmore: தண்ணீரை உறிஞ்சும் ChatGPT!. 50 கேள்விகளுக்கு பதிலளிக்க 2 லிட்டர் குடிக்கிறது!. ஆய்வில் தகவல்!